மனித வாழ்வில் குடும்பம் என்பது ஒரு அருமையான இடம் அல்லவா இந்த இடத்தில் உள்ள உறவுகள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு பெறுகின்றது .

* அப்பா -குடும்பத்தை தலைமை தாங்கி வழிநடத்துபவர்
* அம்மா -அப்பாவோடு இணைந்து குடும்பத்தை தலைமை தாங்கி வழிநடத்துபவர் ,அப்பா இல்லாத இடத்திலும் குடும்பத்தை தலைமை தாங்கி வழிநடத்துபவர்
* அண்ணா - அப்பா ,அம்மா அதற்கு அடுத்ததாக குடும்பத்தை தலைமை தாங்கி வழிநடத்துபவர் ,குடும்பத்தில் முக்கியமான இடம் இவருக்கு உண்டு ,தனக்கு கீழ் உள்ளவர்களை வழி நடத்தக்கூடியவர்
* அக்கா - அப்பா,அம்மா,அண்ணா, அதற்கு அடுத்ததாக குடும்பத்தை தலைமை தாங்கி வழிநடத்துபவர் ,குடும்பத்தில் முக்கியமான இடம் இவருக்கு உண்டு ,தனக்கு கீழ் உள்ளவர்களை வழி நடத்தக்கூடியவர்
* தம்பி -குடும்பத்தில் செல்லமாகவும் இளையவராகவும் அல்லது ஒருவராக அல்லது நடுத்தரத்தில் இருப்பார்
*தங்கை -குடும்பத்தில் செல்லமாகவும் இளையவராகவும் அல்லது ஒருவராக அல்லது நடுத்தரத்தில் இருப்பார்

இந்த உறவுகளுக்கு மத்தியில் ஏதோ ஒரு குறை இருப்பதை அவதானிக்க முடிந்தது முடிந்த வரை ஆராய்ந்தேன் தகவல்களை தேடினேன் நண்பர்களுடன் கலந்தாலோசித்தேன் அனைத்து உறவுகளும் ஒருங்கு சேர்ந்த குடும்பத்தை காணவே முடியவில்லை தொனூத்திதொன்பது வீதம் ஏன் நூறு வீதம் இல்லை என்றே கூறலாம் இருந்த போதும் வலைப்பதிவு நண்பர்களோடு இத் தேடலை விடுகின்றேன் முயச்சித்து பாருங்களேன் .

அண்ணா இருந்தால் அவருக்கு அண்ணா இருக்க மாட்டார் அக்கா,தம்பி,தங்கை, என யாராவது ஒருவர் இருக்க மாட்டார்.

அக்கா இருந்தால் அவருக்கு அக்கா இருக்க மாட்டார் அண்ணா, தம்பி,தங்கை, என யாராவது ஒருவர் இருக்க மாட்டார்.

தம்பி இருந்தால் அவருக்கு தம்பி இருக்க மாட்டார் அண்ணா,அக்கா,தங்கை, என யாராவது ஒருவர் இருக்க மாட்டார்.

தங்கை இருந்தால் அவருக்கு தங்கை இருக்க மாட்டார் அண்ணா, அக்கா,தம்பி, என யாராவது ஒருவர் இருக்க மாட்டார்.

இப்படியே பார்த்தல் அனைத்து உறவுகளும் உள்ள குடும்பத்தை காண முடியவில்லையே என்னோடு சேர்ந்து நீங்களும் தேடுங்களேன். விடை கிடைக்குமோ இல்லையோ என்று எதிர்பாக்கின்றேன். இதுவும் இறைவன் செய்யும் திருவிளையாடல்களில் ஒன்றாக இருக்குமோ என நினைக்கவும் தோன்றுகிறது.

0 Responses to "எல்லோருக்கும் எல்லா உறவுகளும் உள்ளதா? சொல்லுங்கள்..."

Post a Comment