அன்று திங்கட்கிழமை அலுவலகத்தில் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அபிநயா சட்டென கடிகாரத்தை பார்த்தால் அது நேரம் 04 மணியை காட்டிநின்றது அலுவத்தில் வேலையில் ஈடுபட்டிருந்த அனைவரும் வேலையை நிறுத்திவிட்டு வீட்டுக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்
அனால் வழமைக்கு மாராக அபினயாவிக்கு அன்று வீட்டுக்கு போக மனமே வர வில்லை அன்று பூராகவும் அலுவலகம் திறந்திருக்க கூடாத என்றே தன்னுள் நினைத்துக்கொட்டிருந்தவளை சக ஊழிளியர் ஒருவர் என்ன அபிநயா வீட்ட போற எண்ணமே இல்லையா என்று கேட்கவே தான் அவள் சுயநினைவுக்கு வந்தவளாக ஓம் போகத்தான் என்று கூறியபடி வீட்டுக்குச் செல்ல தயாரானாள்
இத்தனைக்கும் கரணம் அபினயாவைப் பெண் பார்க்க மாப்பிள்ளையும், மாப்பிள்ளை வீட்டாரும் அன்று மாலை ஐந்து மணியளவில் வருவதாக காலையில் வேலைக்குச் செல்ல புறப்படும் போது அம்மா சொன்னார் கல்யாணம் என்பதுகாதலால் இரு மனங்கள்ஒன்றிணைப்பு அது சொர்க்கத்தில்நிர்ணயிக்கப்பட்டதுபோன்ற வாசகங்களைபடித்து கேலியாகசிரித்துக்கொண்டவள்அபிநயா
ஆனால் அருணைச்சந்தித்தவேளை அதுஎவ்வளவு உண்மையானதத்துவத்தைவிளக்குகின்றது என்பதைபுரிந்தாள் அபிநயாவின்குடும்பம் அப்பா அம்மாஇரண்டு தங்கைகள் தம்பிஎன ஆறு பேர் கொண்டஅழகிய குடும்பம் அப்பாவங்கி ஒன்றில் வேலைசெய்து இப்போதுஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருக்கிறார்அம்மாவுக்கு வேலைஇல்லை
அபிநயா மூத்தபிள்ளை அபிநயாஉயர்தரம் முதல்தடவையிலேயே சித்திபெற்று பல்கலைக்கழகம்சென்றாள் அங்கு தான்அவள் அருணைச் சந்தித்தால்ஆரம்பத்தில்இவர்களிடையில் நட்புஇருந்த போதும் ,அதுகாலப் போக்கில் காதலாகமாறியது பல்கலைக்கழகபட்டப்படிப்பு முடிந்து அபிநயா மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் ,அருண் யாழ்ப்பாணத்தை வசிப்பிட மாகவும்கொண்டவர்கள்
இவர்கள் தத்தமது வீடுகளுக்கு செல்ல முன்பு அருண் அபிநயாவை சந்தித்து அபிநான்வீட்ட போனவுடன் நிச்சயமா நம்மட விசயத்தை கதைத்து நல்ல முடிவுஎடுத்துக்கிட்டே வருவேன் நீ எதற்கும் பயப்படாதே சரியோ என்று ஆறுதல்கூறினான் அன்று அவர்கள் ஆளுக்காள் ஆறுதல் கூறிக்கொண்டு தம் ஊருக்குசெல்ல ஆயத்தமானார்கள் .
ஊருக்குச் சென்று பலநாட்கள் கடந்து கொண்டிருந்த போதும் அருணுடன் எந்தத்தொடர்வும் இல்லை அபினயாவுக்கோ கவலையாக இருந்தது என்ன செய்வதென்றே தெரியவில்லை நாட்கள் தொடர்ந்து மதங்களாகின இவர்களது காதல்விவகாரங்கள் அபிநயாவின் தந்தையின் காதிற்கும் எட்டியிருந்தது அபிநயாவின்தந்தை யாழ்ப்பாணத்துக்கு சென்றார் .
அங்கு சென்ற போதுதான் அருணை இனந்தெரியாதோர் பிடித்துச் சென்றதைஅறிந்து கொண்டார் தலையில் இடிவிழுந்தது போல் இருந்தது கவலையோடுவீட்டுக்கு வந்தவர் அபினயாவுக்கு ஆறுதல் கூறினார் இவ்வாறு காலம் கடந்துமூன்று வருடங்களையும் கடந்து விட்டது
அபிநயா பிரதேச செயலகம் ஒன்றில் நிகழ்ச்சித்திட்ட உதவியாளராகபணிபுரிகின்றாள் தங்கைகள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்பெற்றோர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவள் வேறு இடத்தில் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவில்லை
அபிநயாவின் நிலையை நினைந்து நினைந்து பெற்றோர் தினமும்கவலையடைந்தனர் அபிநயா எத்தனையோ இடத்தில் இருந்து தானாக தேடிவந்த மாப்பிள்ளையும் வேண்டாம் என்று தடுத்துவிட்டாள்அன்று காலை வேலைக்கு போக தயாராகிக்கொண்டிருந்த வேலை அபிநயாவின்தாயாரும் தந்தையாரும் இங்க பாரு அபி இன்ரைக்குஉன்னை பெண் பார்க்கவராங்க சீக்கிரமா வந்திடு என்று சற்று அதட்டல்லுடனே கூறினார்கள்
அபிநயா வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போதே அறுந்து எண்ணங்களும்அவனது தோற்றமும் கண் முன் வந்தது வந்து அவளை சித்திரவதை செய்ததுவீட்டுக்குச் சென்று வெளிப்படலையைத் திறந்தால் நிறைய ஆட்கள் வீட்டுக்குள்பேசி சிரிப்பது காதுக்கு கேட்டது முன்வரவேற்பறைக்குள் சென்றவளுக்கு
அதிச்சிகாத்திருந்தது ஆம் அங்கு வந்திருந்தது வேறு யாரும் இல்ல அருணும் அவனதுவீட்டாருமே அபிநயாவின் கண்களில் இருந்து ஆனந்தக்கண்ணீர் பெருகியதுஅபிநயாவின் தந்தையர் அபி உனக்கு அதிச்சியான சந்தோசமாக இருக்கணும்என்றுதான் மாப்பிள்ளை இரண்டு நாட்களுக்கு முன்பே போன் பண்ணி அபியிடம்எதுவும் சொல்லவேண்டாம் திடீர் சந்தோசத்தைக் கொடுக்கணும் என்றுசொன்னார் அதுதான் என்று சிரித்தபடி கூறினர்
அபிநயா அங்கிருந்த உறவினரைக்கூட பொருட்படுத்தாதவளாய் செல்லமாககோபித்து சிணுங்கியபடி அருணுக்குப் பக்கத்தில் சென்றால் இருவரிடையில்சந்தோசத்தில் வார்த்தைகள் வரவில்லை மெளனமே நிலவியது அருண்அபினயாவை இறுகக் கட்டிக்கொண்டான்
அங்கிருந்த உறவுக்கரரில் ஒருவர் கல்யாணம் என்பது காதலால் இருமனங்கள்ஒன்றிணைவதே அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்பது உண்மைதான்இதற்க்கு நல்ல உதாரணம் இவர்களது வாழ்வு தன என்று கூறவும்கட்டியணைத்தபடி நின்ற இருவரும் அப்போதுதான் சுய நினைவுக்குவந்தவர்களாக ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர் அடுத்து என்ன ? வருகின்ற முகூர்த்தத்தில் கல்யாணம்தான்
5:37 AM
0 Responses to "கல்யாணம்"
Post a Comment