ஒவ்வொரு பெற்றோரும் தன பிள்ளை நல்லவனாக கெட்டிக்காரனாக வரவேண்டும் என்ற ஆசையை வளர்க்கின்றனர். அதனை செயலில் காட்டுகின்றனரா என்றால் கேள்விக்குறிதான்.
ஆரம்ப பாடசாலை செல்லுமுன் வீட்டுச் சூழலில் தனது பிள்ளைக்கு விளையாட்டுக்கள் மூலம் எழுத வாசிக்கப் பழக்கும் எத்தனை சந்தர்ப்பங்கள் உள்ளன. அவற்றைச் செய்கின்றார்களா? அந்த நேரத்தை எதற்குப் பயன்படுத்துகின்றனர். வீணாக சினிமாவுக்காகவும்,கேளிக்கைகளுக்காகவும் , மதுபானம், புகைபிடித்த, சண்டை சச்சரவு மற்றும் கொடுமை அளத்தல், அயல் வீட்டார் பிரச்சனை என்று சொல்லிக்கொண்டே போகலாம். இத்தனைக்கும் நேரம் இருக்கும்போது பிள்ளைக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதட்கு நேரம் இல்லை என்று சில பெற்றோர் சொல்கின்றனர்.
நேரில்l அவதானித்த சில விடயங்களை சொல்கின்றேன். பக்கத்து வீட்டு பாடம் சொல்லித்தருவாங்க அங்கே போங்கள் என்று சொல்லிவிட்டு ஒரு கொப்பியையும் கொடுத்து அனுப்பிவிட்டு தாங்கள் தொலைக்காட்சி பெற்றோரும் இருக்கின்றனர். பக்கத்து வீட்டு அக்கா சொல்வது உங்கள் மகள் படிக்கின்றாள் இல்லை என்று. ஆனால் பிள்ளை படிக்காமல் இல்லை பக்கத்து வீட்டு அக்காவும் தொலைக்காட்சித் தொடர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக பிள்ளை மீது குற்றம் சுமத்துகின்றார்.
சரி சில வீடுகளிலே பிள்ளைகளை ஒரு ரூமிலே போட்டு பூட்டி வைத்துவிட்டு மறு ரூமிலே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கின்றனர் சில பெற்றோர் பிள்ளைகளுடன் காட்சிக் கூட்டம் விளையாடுகின்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
தாய் தந்தை பிரச்சனை, தந்தை மது அருந்துதல் போன்ற பிரச்சனைகள் சிறுவர்களின் கல்வியிலே பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. இதனால் பிள்ளைகள் உளரீதியான தாக்கங்களுக்கு ஆளாகின்றனர். அத்தோடு பிள்ளைகளுக்கு சரியான வசதிகள் செய்து கொடுக்கப்படாமை. மற்றும் சில பெற்றோர் இவர்கள் படித்துத்தான் என்னத்தை செய்யப்போகிறார்கள் என்று கேட்குமளவுக்கும் இருக்கின்றனர். சில பெற்றோரோ சொல்வது இங்கே நாங்கள் செலவு செய்து படிப்பிப்பதைவிட வெளிநாட்டு வேலைவைப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்பினால் காசாவது வரும் என்று.
யாராவது பக்கத்திலே வெளிநாடு சென்று பெரிய வீடு கட்டிவிட்டால் போதும். அதனைக் காட்டியே நீயும் வெளிநாடு போ இதுபோன்று கல்வீடு கட்டவேண்டும்என்று ஆசைகளை பிள்ளைகளுக்கு வளர்த்து வெளிநாடு அனுப்புகின்றனர்.
தொடர்ந்து வரும்....
0 Responses to "நம் சிறார்களின் கல்வி நிலைதான் என்ன பகுதி 2"
Post a Comment