எழுத்தறிவித்த இறைவனுக்கு முதலில் எனது நன்றிகள்.

ஒரு குழந்தை பிறந்து, வளர்ந்து எதிர்காலத்தில் ஒரு நல்ல பிரஜையாக வாழ பெற்றார்,ஆசிரியர்கள், நண்பர்கள், சுற்றுச் சூழல் என்பன சார்பாக அமையும்போது நட்பண்புகள் கொண்ட நல்ல அறிவு படைத்தவர்களாக திகழ்வார்கள்.


இதற்கு அடிப்படைக் காரணமாக குடும்பமும், குடும்பம் சார்ந்த சூழலும் முக்கியத்துவம் பெற்றாலும் எழுத்தறிவிற்கு பாடசாலையும், ஆசிரியரும் முக்கியத்துவம் பெற்றதாக அமைகின்றது.


எழுத்தறிவுபற்றி நான் அண்மைக்காலமாக பல விடயங்களூடாக ஆராய்ந்து வருவதில் பல சொல்ல முடியாத தலை குனிந்து வாழ வேண்டிய நிலையில் எமது இளம் சமுதாயத்தில் சிறுவர்களின் நிலை காணப்படுகின்றது.
இது யாரின் பிழை? பெற்றார் விடும் பிழையா? அல்லது கற்பிக்கும் ஆசிரியர்கள் விடும் பிழையா?, மாணவர் சமுகத்தின் பிழையா?, எங்கே தவறு நடக்கின்றது?, ஏன் அத்தவறு விடப்படுகின்றது?, இளம் சமுதாயம் எவ்வாறு அத தவறுகளைத் திருத்த முயற்சிக்கலாம். எழுத்தறிவு வீதத்தை எவ்வாறு அதிகரித்து எமது எதிர்கால இளம் சமுதாயத்தைச் எவ்வாறெல்லாம் வளப்படுத்தலாம் என்ற பல விடயங்கலடங்கிய ஆய்வில் ஈடுபட்டுள்ளேன். அவ்வப்போது அந்த ஆய்வு தொடர்பான விடயங்கள் உங்களை வந்து சேரும்.

0 Responses to "நம் சிறார்களின் கல்வி நிலைதான் என்ன"

Post a Comment